பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து



இதயமெல்லாம் அன்பினிலே இணையப் பொங்குக
இன்பமெங்கும் நிலவிடவே பொங்கல் பொங்குக
மதவெறிகள் மாய்ந்ததென்று பொங்கல் பொங்குக
மனித வளம் மேன்மையுறப் பொங்கல் பொங்குக
கதியிழந்த மாந்தர்நலம் மேம்பட்டு யரவே
கலைவளமும் தொழில் வளமும் இலகிச்செழிக்கவே
சதிகளில்லா நெறியுடனே சால்பில் மாந்தர்கள்
தன்னம்பிக்கை ஓங்கிடவே பொங்கல் பொங்குக
பண்பெனுமோர் பாத்திரத்தில் பைந்தமிழன் வெல்லப்
பாகுவிட்டுப் பதமாக்க்  காய்ச்சும் உலை நீரில்
அன்பெனும்நல் அரிசியினை அருள்மணக்க கிட்டே
அகந்தையுடன் பகையுணர்வை விறகெனவே எரித்து
நண்பர்களும் உறவினர்களும் நாடியொருங் கிருந்து
நல்லுறவு நயம் வளர்க்கும் மொழியிலுற வாடித்
தன்வலிமைத் திறத்தினிலே முன்னேறும் படியாய்த்
தன்னம்பிக்கை விருந்துணுகவே பொங்கல்.
வேளாண்மை சிறந்தோங்கப் பொங்குகவே பொங்கல்
வேளாளர் நலமோங்கப் பொங்குகவே பொங்கல்
தோளாண்மை வலிமையினால் தொடர்ந்துபல வினைகள்
துறைதுறைக்கு முயல்கின்ற செயல்வீர்ர் திறத்தால்
தாளாண்மை நெறிவளர்க்கும் சான்றாண்மை வளர்ந்து
சமூகமதில் பொருளெல்லாம் சம்மாகப் பகிர்ந்து
ஆளாகும் அடிமையெனும் அவலநிலை தீர்ந்தே
அனைவருமே வாழ்ந்திருக்கப் பொங்குகவே பொங்கல்
- தமிழன்பன் கவிஞர் ப. முத்துசாமி